-
நீங்கள் போட்டியில் தன்னார்வ அடிப்படையிலேயே பங்குபற்றுகிறீர்கள்
-
விண்ணப்பிப்போர் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்
-
போட்டியில் பங்குபற்ற தகுதி பெறுவதற்கு பூரணப்படுத்தப்பட்ட படிவத்தை கையளிக்க வேண்டும்
-
பூரணப்படுத்தப்பட்ட சகல விண்ணப்பப் படிவங்களும் மைக்ரோசைட் ஊடாக அக்டோபர் 30, 2021 இற்கு முன்னர் சமர்ப்பிக்கப்படவேண்டும்.
-
இலங்கை பிரஜைகள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்
-
தனிநபர்கள் அல்லது சிறிய தொழில்முனைவோர் குழுக்கள் விண்ணப்பிக்க முடியும்
-
குழுவாக விண்ணப்பிக்கின்றீர்கள் ஆயின் குழுவின் ஒவ்வொரு அங்கத்தவரும் தகுதி அளவுகோல்களைப் பூர்த்தி செய்பவராக இருத்தல் வேண்டும். மேலும் அவர்கள் தனித்தனியாக விண்ணப்பிக்க முடியாது.
-
குழுவாக விண்ணப்பிப்போர் தமது குழுவுக்கு தலைவராகவும் அவர்கள் சார்பாக தமது விண்ணப்பத்தை கையளிக்கும் நபராக ஒருவரை நியமித்தல் வேண்டும்
-
போட்டியின் நடுவில் குழுவின் கட்டமைப்போ / தலைமையோ மாற்றப் படக்கூடாது.
-
வெற்றிபெறும் விண்ணப்பம் ஒரு குழுவாக இருப்பின், வெற்றிக்கான பரிசு அக்குழுவின் தலைவராக அடையாளம் காணப்பட்டவருக்கே வழங்கப்படும்
-
போட்டிகள் அக்டோபர் 11, 2021 அன்று ஆரம்பித்து அக்டோபர் 18, 2021 அன்று நிறைவடையும்
-
போட்டியில் பங்குபற்ற நுழைவுக்கட்டணம் அறவிடப்பட மாட்டாது
-
ஏற்கனவே குறிப்பிடப்பட்ட பரிசுகள் வழங்கப்படும். பணப்பரிசோ அல்லது வேறு மாற்றீடுகளோ பரிசாக வழங்கப்படமாட்டாது. பரிசுகளை நீங்கள் கைமாற்ற முடியாது. பரிசுகளின் இருப்பைப்பொறுத்தே அவை வழங்கப்படும். மேலும், எந்த முன்னறிவிப்புமின்றி ஒரு பரிசுக்குப் பதிலாக அதே மதிப்புடைய இன்னொரு பரிசை வழங்குவதற்கான உரிமையை நாம் கொண்டுள்ளோம்.
-
இந்த போட்டிக்காக விண்ணப்பதாரிகளால் ஊபருக்கு வழங்கப்படும் தகவல்கள், யோசனைகள், குறிப்புகள், ஆய்வுகள் ஆவணங்கள் ஆகியன தமது சொந்த யோசனைகளாகவும் உள்ளடக்கமாகவும் இருத்தல் வேண்டும். அத்தோடு, எந்தவொரு மூன்றாம் தரப்பினரினதும் அறிவுசார் சொத்துரிமைகளையும் மீறாத வண்ணம் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்கும் எந்தவொரு தகவல், யோசனைகள், குறிப்புகள், பகுப்பாய்வு, ஆவணங்கள் ஆகியவற்றிற்கு ஊபர் எந்தப் பொறுப்பையும் ஏற்காது.
-
இந்த போட்டிக்காக விண்ணப்பதாரியினால் ஊபருக்கு வழங்கப்படும் சகல தகவல்களும் தன்னார்வத்தின் அடிப்படையிலேயே வழங்கப்படுகின்றன
-
எந்தவித முன்னறிவிப்புமின்றி எந்த நேரத்திலும் போட்டியை ரத்துசெய்யவோ அல்லது திருத்தங்களை மேற்கொள்வதற்கோ எமக்கு உரிமை உண்டு.
-
வெற்றியாளர்கள் குறித்த நடுவர்களின் தீர்ப்பு இறுதியானது
-
போட்டியின் வெற்றியாளரால் பரிசுகள் மீது செலுத்தப்படும் வரிகள் அல்லது நிலுவைத் தொகைகளுக்கு ஊபர் பொறுப்பேற்காது.
-
போட்டியின் வெற்றியாளர்கள் நியாயமான விளம்பரத்திற்காக அவர்களின் பெயர், புகைப்படம் மற்றும் கருத்துக்களையும் எந்தவித கட்டணமும் செலுத்தாமல் பயன்படுத்தவும் ஒப்புக்கொள்கிறார்கள்.
-
. ஊபர் அதன் செயல்பாடுகளின் வாய்ப்பெல்லைகளை விரிவாக்காமல் தொடர்ந்தும் இடைத்தரகராக செயல்பட்டு வருகிறது.
-
இவ்வாறான போட்டிகளுக்காக விநியோகிக்கப்பட்ட பொருட்கள் / பரிசுகளுக்கு ஊபர் நிறுவனம் எந்த வகையிலும் வணிகராக செயல்படாது
-
இந்தப் போட்டியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் இலங்கையின் சட்டங்களாலே நிர்வகிக்கப்படும்.
-
போட்டியினுள் நுழைவதன் மூலம் இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நீங்கள் ஏற்றுக்கொள்வதை உறுதி செய்கிறீர்கள்